Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

அக்டோபர் 13, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு யோசனைகள் நாடாளுமன்ற விசேட செயற்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி, தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு ஏதுவான வகையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு அமைவாகத் தமது யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து, உறுதியான தீர்மானமொன்றை எடுக்குமாறு நாடாளுமன்ற விசேட செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டிய அவர், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் சில அம்சங்கள் முழுமைப்படுத்தப்படாததால், எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது என்பதில் சட்டச் சிக்கல் நிலவுவதாக அவர் விளக்கியுள்ளார்.

எனவே, தேர்தல் முறைமை தொடர்பில் நாடாளுமன்றத்தின் ஊடாகத் தெளிவான தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், அதன் பின்னரே மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விசேட செயற்குழு விரைவில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாகாணசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் செயற்குழு முன்வைத்த விடயங்களைக் கருத்திற்கொண்டு அதற்கான யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இளைஞர்களின் பிரதிநிதித்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதால், அந்த விடயம் தொடர்பிலும் மேலதிக யோசனைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் நாட்களில் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் இதுவரை 92,254 பாதிப்பு

ஆகஸ்ட் 17, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி . சௌத்ரி சாலை விபத்தில் காலமானார்!

மே 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடன் வழங்குநர் மின்னஞ்சல் பொருந்தவில்லை என எச்சரித்தும் மோசடியாளர்களுக்கே பணப்பரிமாற்றம் செய்த அதிகாரிகள்!

ஜூலை 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஆகஸ்ட் 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube