ஞானசார தேரரை விடுதலை செய்வதற்காக முப்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தலையிட முன்வந்துள்ளதால், கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களுடன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் முப்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தலையிட முன்வந்துள்ள நிலையில், அவர்களின் தலையீட்டுக்கு இடமளிக்கும் வகையில் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
