நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி துபாயில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதன்போது பேசிய சூர்யா, இயக்குநர் ஜித்து மாதவனுடன் பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேறியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ‘சீன்’ திரைப்படத்தின் கதையைக் கேட்டபோது ஆரம்பம் முதல் இறுதிவரை சிரித்துக்கொண்டே இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ திரைப்படங்களைப் போன்று இப்படத்திலும் தனித்துவமான உலகத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ திரைப்படங்களைப் போன்று ‘சீன்’ திரைப்படத்தையும் ரசிகர்கள் விரும்புவார்கள் என நம்பிக்கை வெளியிட்ட சூர்யா, ழகரம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படத்துக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை எனக் கேட்டுக்கொண்டார்.
