மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹற்றன் தனியார் பேருந்து நிறுத்துமிடத்தில் இன்று பாரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்த சந்தர்ப்பத்தில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று முன்னோக்கி நகர்த்தப்பட்டிருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹற்றன் பேருந்து நிலையப் பகுதியில் தொடர்ந்து பேருந்துகளை நிறுத்தி வைப்பது ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சாரதிகளும் பொதுமக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
