காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று (26) முதல் தொடர்ச்சியாக வான்பாய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் வான்பாயும் மட்டத்தை அண்மித்துள்ளதாகப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், நீர்த்தேக்கங்களை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
