தலவாக்கலை நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிசிடிவி கமராக்களை விற்பனை செய்து பொருத்தும் வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில், ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளன.
கடந்த 25ஆம் திகதி இரவு வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த நபரொருவர், கையடக்கத் தொலைபேசிகள், பணம் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த திருட்டுச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியையும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கோரியுள்ளார். சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
