Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

PSTA சட்டமூலத்தை மறுவரைவு செய்யுமாறு ஐ.நா. வலியுறுத்தல்!

நவம்பர் 1, 2026
படிக்க 3 நிமிடங்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTA) தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) கடுமையான கவலைகளை வெளியிட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் தன்னிச்சையான தடுத்துவைப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதுடன், கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கான அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

2026 செப்டெம்பர் 22ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலம் தொடர்பாக, ஒக்டோபர் 13ஆம் திகதியிடப்பட்ட 19 பக்க சட்ட மதிப்பீட்டு அறிக்கையில் இந்தக் கவலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முந்தைய வரைவுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய சட்டமூலத்தில் சில முன்னேற்றங்கள் காணப்படுவதை ஐ.நா. வரவேற்றுள்ளது. இருப்பினும், நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காணப்பட்ட பல குறைபாடுகள் புதிய சட்டமூலத்திலும் தொடர்வதாகவும், சில விடயங்களில் அவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, பயங்கரவாதக் குற்றங்களுக்கான வரையறைகள் பரந்ததாகவும் தெளிவற்றதாகவும் இருப்பதால், சட்டபூர்வமான கருத்து வெளிப்பாடுகள், அமைதியான போராட்டங்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இரண்டு மாதங்கள் வரை தடுத்துவைப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், அவற்றை அதிகபட்சமாக ஒரு வருடம் வரை நீடிக்கவும் அதிகாரம் வழங்கப்படுவது குறித்தும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினருக்கு வழங்கப்படும் பரந்த கைது, தேடுதல் அதிகாரங்களுக்கும் போதிய நீதித்துறை மேற்பார்வை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பொலிஸாரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளும் ஏற்பாடு நீக்கப்பட்டமை, ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கான சில பாதுகாப்புகள், பொலிஸ் விசாரணைகளை ஒலி-ஒளிப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை ஐ.நா. வரவேற்றுள்ளது.

கைது மற்றும் தடுத்துவைப்பு தொடர்பான தகவல்களை 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என்ற ஏற்பாடும் சாதகமான முன்னேற்றமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இத்தகைய மாற்றங்கள் சட்டமூலத்திலுள்ள ஒட்டுமொத்த மனித உரிமை அபாயங்களைத் தடுப்பதற்குப் போதுமானவை அல்ல என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்ட பின்னரும், அதன் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் சில விதிமுறைகளைத் தொடர அனுமதிக்கும் இடைக்கால ஏற்பாடுகள் குறித்தும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

எனவே, சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு அமைவாகச் சட்டமூலத்தை முழுமையாக மறுவரைவு செய்யுமாறு அரசாங்கத்திடம் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதம் தொடர்பான வரையறையைத் திட்டமிட்ட வன்முறைச் செயல்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துதல், கைது செய்யப்படும் அனைவரையும் 24 மணித்தியாலங்களுக்குள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துதல், சித்திரவதை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றுக்கு எதிரான வலுவான பாதுகாப்புகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதுடன் அடிப்படை மனித உரிமைகளையும் மதிக்கும் வகையிலான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்துக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளதுடன், புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கடந்த காலங்களில் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தரப்பினர், பெயர் மாற்றம் மாத்திரம் சட்டத்தின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டமூலத்தைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ள தமிழ்க் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர் சங்கங்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு மரணங்கள் மேலும் உயர்வு

ஜூலை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரொஹிங்கிய அகதிகளின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

அக்டோபர் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புற்றுநோயை கண்டறியும் பெட் ஸ்கேன் பரிசோதனை சேவைகள் மீள ஆரம்பம்!

மே 5, 2026
இலங்கை

ரம்புக்கனையில் ரயில் தடம்புரள்வு!

ஜூன் 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube