அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற G20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், முக்கிய சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் ஒருமித்த இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.
இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவின் பங்கேற்புக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பாரம்பரியமாக இடம்பெறும் அமைச்சர்களின் குழுப் புகைப்படம் இரத்துச் செய்யப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில் கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, கூட்டத்தின் தலைவராகச் செயற்பட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, கடல்வழிப் போக்குவரத்துச் சுதந்திரம் மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னுரிமைகளை உள்ளடக்கிய அறிக்கையை வெளியிட்டார்.
ரஷ்யா – உக்ரைன் போர், ஈரான் தொடர்பான மோதல் மற்றும் வர்த்தகக் கொள்கைகள் உள்ளிட்ட விவகாரங்களில் நாடுகளுக்கிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகள் கூட்டத்தின் முடிவிலும் தொடர்ந்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
