தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலங்களுக்கு எதிராக, பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக நேற்று (01) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில், புலம்பெயர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
