தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 6 வான் கதவுகள் தலா 3 அடி வீதமும், ஏனைய 2 கதவுகள் தலா 2 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விநாடிக்கு 15,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் தெதுரு ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
