Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் அதிகாரி வருணி போகஹவத்த விளக்கமறியலில்!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொள்வனவு செய்த சொகுசு வாகனத்திற்கான பணம் மற்றும் குத்தகைக் கொடுப்பனவுகளின் மூலத்தை விசாரிக்கும் நோக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் தலைமைப் பரிசோதகர் (CIP) வருணி போகஹவத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை (6) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட அவர், கடந்த செவ்வாய்க்கிழமை (3) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பாகப் பணியாற்றிய வருணி போகஹவத்தவிடம் இருந்த சொகுசு வாகனம் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த வாகனத்திற்கான குத்தகைத் தவணைகளை, மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வருணி போகஹவத்தவின் மாதாந்த சம்பளம் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும், வாகனத்திற்கான மாதாந்த குத்தகைத் தவணை மட்டும் 1 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலம் என்ன என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் : ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம்!

ஜூலை 6, 2026
இலங்கை

குடும்ப சுமையால் ஓமான் சென்ற வவுனியா பெண் மரணம்!

ஜூன் 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிரித்தானியப் பிரதமர் தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக ‘தி அப்சர்வர்’ நாளிதழ் தெரிவித்துள்ளது!

ஜூன் 21, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

சென்னை கோயம்பேட்டில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொலை…

மே 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube