Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஆடி 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்

கடந்த 2013, 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் 2013, 2014 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தொடர்ச்சியாக குறித்த 14 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள தந்தை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த தந்தைக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கானது வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு திகதியிடப்பட்டு இன்று (16) வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது, குறித்த 47 வயது நிரம்பிய தந்தைக்கு ஏதிராக 4 பாலியல் துஷ்பிரயோகக் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மன்று, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 4 குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில் 45 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன், நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரூபாய் 3 இலட்சம் வீதம் 12 இலட்சம் ரூபாய் சிறுமிக்கு நஸ்ட ஈட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் நீதிமன்றத்திற்கு அபாரம் செலுத்த வேண்டும் எனவும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.

குறித்த பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்க வேண்டிய அவரின் பாதுகாவலராகிய தந்தையே குறித்த குற்றச்சாட்டினை புரிந்துள்ளமை காரணமாக எவ்வித கருணையும் காட்டாத, அதிகபட்ச தண்டனை விதித்துள்ளதாக நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பின் போது சுட்டிக்காட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பிள்ளையான் கைது தொடர்பில் ஞானசார தேரரின் சந்தேகம்!

சித்திரை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கான கொரியத் தூதுவர் ஜனாதிபதியின் செயலாளரை சந்திப்பு

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரவு 8:00 மணிவரை நீர்வெட்டு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்ல வனப்பகுதியில் தீ விபத்து!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube