இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (16) வரையான தரவுகளின்படி, டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரே நாளில் 1,025 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 38,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 15,341 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 14,625 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதத்தின் முதல் 16 நாட்களில் மட்டும் 18,076 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டில் அதிகளவான மாதாந்த நோயாளர் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளது. அந்த மாதத்தில் 21,538 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
