இந்தியாவின் முதலாவது உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு சுமார் 26 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
இந்த பயணத்தின் முதலாவது அம்சமாக இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் பயணிகள் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.
இந்த ரயிலை அரியானா மாநிலம் ஜிந்த் ரயில் நிலையத்தில் இன்று (17) காலை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் இலட்சிய பயணம் மற்றும் நிலையான பசுமையான ரயில் போக்குவரத்துக்கான புதிய திட்ட அத்தியாயம் ஆரம்பமானது.
உலகில் முதன் முதலாக ஹைட்ரஜன் பயணிகள் ரயிலை 2018 ஆம் ஆண்டு ஜெர்மனி ஆரம்பித்தது. அதன் பின்னர் ஜப்பான் ,சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஹைட்ரஜன் ரயிலை ஆரம்பித்து வைத்தன. அந்த வகையில் உலகில் ஆறாவது ஹைட்ரஜன் பயணிகள் ரயிலை ஆரம்பித்து வைத்த பெருமை இந்தியாவை சேர்ந்துள்ளது.
பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயிலில் ஒரே நேரத்தில் 2600 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும்
ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டியே கண்டறியும் பன்முக பாதுகாப்பு அமைப்புகளுடன் பாதுகாப்பான ரயில் என்ற சிறப்பு அம்சத்தையும் இந்த ஹைட்ரஜன் ரயில் கொண்டுள்ளது
இந்தியாவின் தற்போது 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட புகையிறத பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாசில்லா ரயில் இயக்கத்துக்கான அடுத்த கட்ட முயற்சியாகவே இந்த ஹைட்ரஜன் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
Video Link : https://www.facebook.com/reel/1703545494021027
