Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோலாகலமாக ஆரம்பமானது LPL போட்டிகள்

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரமாண்டமான ஆரம்ப விழாவுடன் எஸ்எஸ்சி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) தொடங்கிய 6ஆவது லங்கா பிறீமியர் லீக்கின் (LPL) முதலாவது போட்டியில் நடப்பு உப சம்பியன் கோல் கெலன்ட்ஸ் அணியிடம் 36 ஓட்டங்களால் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் சரணடைந்தது.

இப் போட்டிக்கு முன்பதாக அரங்கேற்றப்பட்ட கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளும் 500 ட்ரோன்களின் வான்வெளி சாகசங்களும் பரவசத்தில் ஆழ்த்தியது.

அத்துடன் கோல் கெலன்ட்ஸின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்தவுடன் நடத்தப்பட்ட கதிரியக்க காட்சிகள் மேலும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் கெலன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் சரித் அசலன்க 65 ஓட்டங்களையும் சாம் ஹாப்பர் 40 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே 35 ஓட்டங்களையும் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லிஸாட் வில்லியம்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இதில் துனித் வெல்லாலகே 40 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 34 ஓட்டங்களையும் காமில் மிஷார 28 ஓட்டங்களையும் சமிந்து விக்ரமசிங்க 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆக்கிப் ஜாவேட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தசுன் ஷானக்க, சரித் அசலன்க, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலன்க தெரிவு செய்யப்பட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரங்க திஸாநாயக்கவின் மிரட்டலே கபில சந்திரசேனவின் மரணத்துக்கு காரணம் – சரத் வீரசேகர!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காருடன் மோதிய மோட்டார்சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசம்

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

வைகாசி 18, 2026
எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மலையக காணி உரிமைக்காக கொழும்பு நோக்கி நடக்கும் 7 வயது சிறுவன்!

வைகாசி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube