குருநாகல், வெலகெதர பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் மற்றும் மேலும் மூவரை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி, வெலகெதர, தியகவிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கற்கள், தடிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிமன்றம், ஐந்து பேரும் கொலை மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் எனத் தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து, கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
