Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகளை சிறப்பாக வழிந்த எங்களுக்கு சிறந்த அனுபவம் உண்டு – நாமல் ராஜபகஷ

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதோ அல்லது சிறைச்சாலைகளை நிரப்புவதோ அரசாங்கத்தின் வெற்றியல்ல, அது சமூக சீர்கேட்டின் அடையாளமாகும்.கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சிறந்த முறையில் சமூகமயப்படுத்த வேண்டும். அதற்கான அனுபவம் எமக்கு உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கேகாலை பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை சமூக ஊடகங்களை பார்த்தே குறிப்பிட வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிடும் நிலைக்கு நிர்வாக கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது.

சிறைச்சாலை நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் வினைத்திறனான வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட வேண்டும். புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதும், சிறைச்சாலைகளை நிரப்புவதும் அரசாங்கத்தின் வெற்றியல்ல, அது சமூக சீர்கேட்டின் அடையாளம்.

சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 85 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டவர்கள். ஆகவே இவர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் 12 ஆயிரம் போராளிகளுக்கு முறையான புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சிறந்த முறையில் சமூகமயப்படுத்தப்பட்டார்கள். ஆகவே அதேபோன்று போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டும். அது தொடர்பான அனுபவம் எமக்குள்ளது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயிலில் மோதி மிதிவண்டி செலுத்துனர் ஒருவர் பலி !

ஆவணி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நயினாமடு குள புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

ஆடி 20, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

118 பெரும்பான்மைக்கு விஜய் எதிர்கட்சிகளோடு பேச்சுவார்த்தை!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

23000 புதிய ஆசிரியர் நியமனம் – ஹரிணி அமரசூரிய

ஆவணி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube