ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
