இலங்கையில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 3,000 ரூபா அதிகரித்து 380,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
