இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் எனச் ஸிம்பாப்வே அணியின் தலைவர் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார்.
ஹராரேவில் நடைபெற்ற போட்டியில், இந்தியா நிர்ணயித்த 220 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 129 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்ததுடன், தொடரையும் இழந்துள்ளது.
இந்தத் தோல்வி குறித்துப் பேசிய சிக்கந்தர் ரஸா, தொடர் தோல்விகளுக்குத் தனது துடுப்பாட்டமே முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அணியின் வெற்றிக்குத் தனது பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதால், அடுத்த போட்டியில் மீண்டு வர முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
