இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இரு புதிய மாதிரி கிராமங்கள் நேற்று (29) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
கேகாலையில் அமைக்கப்பட்ட ‘நந்த கிராமம்’ மற்றும் களுத்துறையில் அமைக்கப்பட்ட ‘ஜன அருண கிராமம்’ ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வுகளில் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக படபெந்தி மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 48 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் புதிய வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையின் 25 மாவட்டங்களில் 600 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 18 மாவட்டங்களில் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், மொத்த திட்டத்தின் 98.5% பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
