திறமையும் தொலைநோக்கும் கொண்ட இளைஞர்களை உருவாக்குவதுடன், அவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவது நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (30) நடைபெற்ற “Sri Lanka Skills Expo 2026” கல்விக் கண்காட்சியின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்தக் கல்விக் கண்காட்சி, எதிர்வரும் ஒக்டோபர் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் கொழும்பு 07, விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
