Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

3 மாதத்தில் இந்தியர்கள் செய்த பிரம்மாண்ட செலவு!

ஆடி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தங்க இறக்குமதி வரியும் 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்தியர்களின் தங்கம் வாங்கும் ஆர்வம் குறையவில்லை.

உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஜூன் காலாண்டுப் பகுதியில் இந்தியர்கள் ரூ.1.98 இலட்சம் கோடி மதிப்பிலான 131.4 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், இது ரூ.1.32 இலட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த அளவு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் அளவு அடிப்படையில், 139.7 டொன்னில் இருந்து 131.4 டொன்னாக 6 சதவீதம் குறைந்துள்ளது.

தங்க நகைகள் வாங்குவது 15 சதவீதம் குறைந்து 75.1 டொன்னாக இருந்தாலும், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களின் வாங்குதல் 9 சதவீதம் அதிகரித்து 50.3 டொன்னாக உயர்வடைந்துள்ளது. அதிகரித்த தங்கம் விலையிலும், பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் முதலீட்டு சொத்தாக தங்கத்தை மக்கள் தொடர்ந்து கருதுவதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், தங்க ETF-களில் முதலீடு 49 சதவீதம் அதிகரித்து 4.2 டொன்னாக உயர்ந்துள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 17 சதவீதம் குறைந்து 19.2 டொன்னாகவும், அதிக இறக்குமதி வரி காரணமாக தங்க இறக்குமதி 23 சதவீதம் குறைந்து 98.1 டொன்னாகவும் பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.50 இலட்சத்திற்குக் கீழ் சரிந்து, கொள்வனவை அதிகரிக்கச் செய்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வரும் பண்டிகை மற்றும் திருமண சீசன் காரணமாக வருடத்தின் இரண்டாம் பாதியிலும் தங்க தேவை வலுவாக இருக்கும் என்றும், 2026-ஆம் ஆண்டின் மொத்த தேவை 650 முதல் 750 டொன் வரை இருக்கும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கையர்கள் நாடு திரும்ப அனுமதி

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு திணைக்களத்தில் 98 இலட்சம் மோசடி: ஐடி கட்டுப்பாட்டாளர் கைது

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் வீடுபுகுந்து தாக்கிய கும்பல் – 5 பேர் படுகாயம்!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

மரபணு பரிசோதனை விண்ணப்பம் நிராகரிப்பு

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube