ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் தற்போது இரகசியமாக உருக்குலைக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகள் தொடர்பில் புதன்கிழமை (29) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2009ல் எங்களது 30 வருட கால ஈழ விடுதலைப் போராட்டம் முற்றுப்பெற்ற ஒரு இடம் இந்த இடத்தில் தான் சர்வதேச நாடுகளின் துரோக தனத்தினாலும், குழி பறிப்புக்களாலும் எமது ஈழ விடுதலை போராட்டம் முற்றுப்பெற்ற ஒரு இடம். இந்த இடம் உருக்குலைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலே காணப்படும் எமது அடையாளங்கள் இரகசியமாக அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
ஆரம்ப காலத்தில் கூறப்பட்டது இப்பாலம் உடைக்கப்படாமல் இந்த பாலத்தை தற்காலிகமாக வைத்துக்கொண்டு இன்னுமொரு பாலத்தை போட்டிருக்க வேண்டும் அது தான் நியாயம். இந்த பாலத்தை உருக்குலைக்கின்றார்கள் என்றால் உள்நோக்கம் கொண்ட இந்த அரசு செய்யும் ஒரு செயற்பாடு என்பது இவ் விடயத்தில் தெரிய வருகிறது என மேலும் தெரிவித்தார்.
