தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களால் ரசிகர்களிடையே தனித்துவமான இடம்பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார்.
குறிப்பாக, சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அவர், பல வெற்றிப் படங்களில் தனது வலுவான நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார்.
74 வயதான நடிகர் பிரதீப் ராவத்தின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
