இரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீசப்பட்ட இரண்டு கைக்குண்டுகளில் ஒன்று வெடித்துள்ளதுடன், மற்றொன்று வெடிக்காமல் இருந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
