இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அண்மையில் இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் அவர் இந்த சாதனையைப் பெற்றுள்ளார். 1,354 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ள ருமேஷ் தரங்கா, ஆண்கள் ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.
உலக தடகள அமைப்பின் உத்தியோகபூர்வ தரவரிசை விபரங்களை இங்கே பார்வையிடலாம்:
https://worldathletics.org/world-rankings/javelin-throw/men
