ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச அரங்கில் தரங்க வெளிப்படுத்திய தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களின் விளைவாக, ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வாழ்நாள் சாதனையாக 89.75 மீட்டர் தூரம் எறிந்து இந்தப் பட்டத்தை வென்ற இலங்கை வீரர், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தரங்க மொத்தம் 1,354 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று, சமீபத்திய உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னர் முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபர், 1,348 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மூன்றாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
