திருகோணமலை மாவட்டம், மொரவெவ, மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை திடீரென ஏற்பட்ட குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 3 மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
