பள்ளஞ்சேனை சிறையில் இன்று (07) காலை ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டை மீண்டும் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
