Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சுட்டெரிக்கும் வெப்பம் : ஜிட்ரிநிகா குகையை நாடும் மக்கள்

ஆவணி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன் குடாப்பகுதியில் அமைந்துள்ள நாடு, போஸ்னியா. உலகம் முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையில், போஸ்னியாவிலும் 104 டிகிரி ஃபரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கிறது.

இதிலிருந்து தப்பிக்க, அங்குள்ள மக்கள் பலரும் பல்வேறு வழிகளைத் தேடிவரும் நிலையில், தெற்கு போஸ்னியாவின் தினாரிக் மலைத் தொடரில் அமைந்துள்ள ஜிட்ரிநிகா குகை (Vjetrenica Cave), மக்களைக் குளிர்வித்து வருகிறது.

போஸ்னியாவின் மிகப்பெரிய குகையான இதன் நீளம் சுமார் 7,014 மீட்டர்கள் (7.01 கி.மீ) ஆகும். குகையினுள் பல நிலத்தடி ஆறுகள், நீரோடைகள் மற்றும் ஏரிகள் இருப்பதால், ஆண்டின் அனைத்து நாட்களிலும் இக்குகையின் உட்புற வெப்பநிலை மாறாமல் 11°செல்சியஸிலேயே காணப்படும்.

மேலும், இதன் நுழைவாயிலில் சக்திவாய்ந்த காற்று வீசுவதால் இது ஜிட்ரிநிகா குகை என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இதற்கு ’காற்றுக் குகை’ என்பதே பொருளாகும்.

இந்தக் குகையில் ஆண்டு முழுவதும் நிலையாக 52 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையே நிலவுவதால் கோடைக்கால வெப்பத்துக்கு நடுவே இயற்கை ஏசியாக கருதப்படுகிறது. இது யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவில் வீசி வரும் கடுமையான வெப்ப அலையின் காரணமாக, மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஜிட்ரிநிகா குகையை (Vjetrenica Cave)தஞ்சமடையும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

தீவிரமடைந்து வரும் வெப்ப அலைகளால், இக்குகையை ஆண்டுதோறும் 21,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிடுகின்றனர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர், அந்தக் குகையைக் கோடைக்காலத்திலேயே பயன்படுத்துகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆவணி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேராதனையில் புதையல் தோண்ட முயன்ற இருவர் கைது

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடி 20, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ICC வருடாந்த தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் – இலங்கை அணி 9 வது இடத்தில்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube