Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது!

ஆவணி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற 2 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப் பகுதியிலிருந்து சிறைச்சாலைக்குள் 02 பொதிகளை வீசுவதற்கு அவர்கள் முயன்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்த 02 பொதிகளையும் பரிசோதித்த போது, 22 கிராம் 250 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 02 மில்லிகிராம் ‘ஹேஷ்’ போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய ரக கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தயா குரூப் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட மக்கள் வங்கிக்கு முழு உரிமை!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றாடல் அமைச்சில் காணப்படும் நிறுவன வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் நாளை பரிசீலனைக்கு

ஆவணி 31, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ஹேந்தலை தொழுநோய் வைத்தியசாலையை அருங்காட்சியகமாக மாற்ற அரசு கவனம்!

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube