Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைசினிமா

திரைப்படத்தை சட்டவிரோதமாக பகிர்ந்த மாணவருக்கு எச்சரிக்கை!

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிங்கள திரைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் சட்டவிரோதமாகப் பதிவேற்றிப் பகிர்ந்தமை தொடர்பில் மொரட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர் ஜனித மாரசிங்கவின் திரைப்படத்தை பேஸ்புக் மற்றும் டெலிகிராம் ஊடாக பகிர்ந்த நபருக்கு எதிராக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரசித ஜினசேன, இவ்வாறான திரைப்படத் திருட்டு சிறிய குற்றமல்ல என்றும், அது குற்றச் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கொரலவெவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இதனுடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில், குறித்த மாணவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு சம்பவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், திரைப்படத் திருட்டை கட்டுப்படுத்தவும், இதற்கு எதிரான சட்டங்களை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உடலுக்குள் கொக்கெய்ன் மறைத்து கடத்திய வெளிநாட்டு பெண் கைது!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் மற்றும் நாவற்காடு கடற்கரை பகுதிகளில் பெருந்தொகை பீடி இலைகள் கடற்படையினால் மீட்பு

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 40 அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube