Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினம்!

ஆகஸ்ட் 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15 வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதுடெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, புதுடெல்லியில் உள்ள ராஜ்கோட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமரை, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பின்னர், கடமைப்பாதையில் முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 13ஆவது முறையாக இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதன்போது, 1721 ஃபீல்டு பேட்டரி சார்பில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டின் சுதந்திர தின விழாவின் முக்கிய அம்சமாக, செங்கோட்டையில் முதன்முறையாக “வந்தே மாதரம்” பாடல் இசைக்கப்பட்டது. அத்துடன், வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமைக்கும் சிறப்பு நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.

https://www.facebook.com/share/v/1acP5feDQu/

தேசியக் கொடியை ஏற்றிவைத்த பின்னர் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், மின்னணுப் பொருட்களின் உற்பத்தி ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த முன்னேற்றங்களின் மூலம் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்வதாகவும், உலகளவில் இந்தியா தொடர்பான பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பிரிவினரினதும் கூட்டு முயற்சியின் ஊடாக இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருவதாகத் தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் மேலும் பெரிய சாதனைகளை எட்டுவதற்கு ஒவ்வொரு இந்தியரும் உயர்ந்த கனவுகளைக் காண வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர்ந்த பிரதமர், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை எதிர்கால தலைமுறையினரும் நினைவில் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடி பறப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் குறித்து ஐ.நா வதிவிடப் பிரதிநிதியுடன் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கலந்துரையாடல்

செப்டம்பர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி, மா ஓயா நீர்மட்டம் உயர்வு – 3 குடிநீர் திட்டங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஆகஸ்ட் 4, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல் தொடர்பில் மூன்று நாட்களுக்கு முன்னரே புலனாய்வுத் தகவல் வழங்கப்பட்டுள்ளது – ஹர்சன ராஜகருண

ஜூலை 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube