Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

நேருக்கு நேர் மோத இருந்த விமானங்கள் – நூலிழையில் தப்பிய பல உயிர்கள்!

ஆவணி 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்

அமெரிக்காவில் நடுவானில் நடக்க இருந்த மிகப்பெரிய விபத்து ஒன்று விமான கட்டுப்பாட்டு அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரிசோணா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸ் நகரில், ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த விமான நிலையத்தில், தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் புறப்பட்டும், தரையிறங்கியும் வருகின்றன.

இதில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் ஜெட் விமானம், தினமும் சிகாகோவில் இருந்து ஃபீனிக்ஸ் நகருக்கும், ஃபீனிக்ஸ் நகரில் இருந்து சிகாகோவுக்கும் செல்வது வழக்கம். மேலும், சிகாகோவிலிருந்து ஃபீனிக்ஸ் வந்துசெல்லும் இந்த ரவுண்ட்-ட்ரிப் விமானங்களுக்கு ஒரே விமான எண் தான் பயன்படுத்தப்படும்.

இந்நிலையில், சிகாகோவில் இருந்து கிளம்பிய விமானம், மோசமான வானிலை காரணமாக 90 நிமிடங்கள் தாமதமாக வந்தது. இதனால் பயணிகளை அனுப்ப, ஃபீனிக்ஸில் இருந்த மற்றொரு மாற்று விமானத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாகப் பயன்படுத்தியது.

American Airlines

இதற்கிடையே, சில குளறுபடிகளால் இரு விமானங்களுக்கும் ஒரே விமான எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாமதமாக வந்த விமானமும், புதிதாகப் புறப்பட்ட விமானமும் ஒரே நேரத்தில் வான்வெளியில் சந்தித்துக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.

மேலும், இரு விமானங்களுக்கும் ஒரே எண் வழங்கியிருப்பதால், விமான கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிவுறுத்தல்கள் தங்களுக்கானது என்று, இருவரும் புரிந்துக் கொள்ளும் சூழலும் உருவாகியதால், பெரும் விபத்துக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், இதனை நொடிப் பொழுதில் அறிந்த விமான கட்டுப்பாட்டு அதிகாரி, இரு விமானிகளுக்கும், சரியான குறிப்புகளை வழங்கி, விபத்தை தவிர்த்தார்.

அதாவது, இரு விமானங்களின் எண்ணுடன் சேர்த்து, தரையிறங்கும் விமானமா? புறப்படும் விமானமா? என்ற தகவல்களையும் சேர்த்து கூறினார். இதனால், இரு விமானிகளும் உஷாராகி, குறிப்புகளை சரியாக புரிந்துக் கொண்டனர். புறப்படும் விமானத்தை அதிக உயரத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும், தரையிறங்கும் விமானத்தை அதற்கு மேலேயும் பாதுகாப்பான இடைவெளியில் இயக்கினார்.

இரண்டு விமானங்களின் பைலட்டுகளும் ஒருவரையொருவர் தூரத்திலிருந்தே பார்த்துக்கொள்ளும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்கினார். விமானங்கள் பாதுகாப்பாகக் கடந்து சென்றதும், தரையிறங்கிய விமானத்தின் பைலட் கட்டுப்பாட்டு அதிகாரியின் திறமையான செயலை வெகுவாகப் பாராட்டினார்.

இதனால், பெரும் அசம்பாவிதம் நிறுத்தப்பட்டு, பல உயிர்கள் காக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து நிர்வாகம், தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

AI நேரடியாக இயங்கும் புதிய சிப்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி செய்த இருவர் கைது

ஆவணி 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் – அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 19 கையெழுத்திடப்படும்!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube