Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையகத்திலுள்ள ஆலயங்கள் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆவணி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மலையகத்திலுள்ள அனைத்து இந்து ஆலயங்களும் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், பதிவு செய்வதன் மூலமே அரசாங்கத்தின் நிதியுதவிகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற முடியும் எனவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் பதிவு செய்யப்படாத ஆலயங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் ஆலயங்களுக்கு மட்டுமே நிதி மற்றும் ஏனைய உதவிகளைப் பெற முடியும்.

இதன்படி பதிவு செய்யப்படாத ஆலயங்களின் நிர்வாகிகள் இதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் (Online) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கும் மேலதிக வழிகாட்டல்களுக்கும் 070 32 80 729 என்ற அமைச்சின் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கும் போது, இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலிக்கப்பட்டு, மிக விரைவாக ஆலயப் பதிவு நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஒரு வருடத்தில் சுமார் 3,400 டன் எடையுள்ள மருந்துகள் குப்பையில் வீசப்படுகின்றன

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் – இழப்பீட்டு தொகை இதுவரை கிடைக்கவில்லை – வைத்தியர் சமல் சஞ்சீவ

ஆவணி 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் டுவாப்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளரை சந்தித்த பிரதமர்!!

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube