முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக, முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிள்ளையானுடன் கதிர்காம்பி ஜெயகிஷன் எனப்படும் ஜெயந்தன், நிமல் தேவ்சுகன் எனப்படும் ஜெயகந்தன் மற்றும் நடராசா நாகுலேந்திரன் எனப்படும் சிம்பு அல்லது நாகுலன் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் ரவீந்திரநாத், 2006ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதிக்கிடையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
