சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டுப் பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் சார்பில் முதலமைச்சர் விஜய் அவையில் மன்னிப்பு கோரியுள்ளார்.
வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் உரையாற்றும்போது, முன்னாள் முதலமைச்சர் என குறிப்பிடாமல் கருணாநிதியின் பெயரை பயன்படுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கருணாநிதி தொடர்பான அமைச்சரின் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பில் அவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய், “உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான். அவர் சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
