இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய க் கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட நேற்று செவ்வாய்க்கிழமை (18) ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகு முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரண தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் எதிர்வரும் மாதம் முதலாம் திகதியில் இருந்து தங்கச்சி மடத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
