Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்!

Rajagiriya | Foreigners | 120 people | Arrested | Srilanka | QuickTamilNews

வைகாசி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இராஜகிரிய பகுதியில் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த மோசடி வியாபாரத்தை அவர்கள் முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 120 பேரில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவர்களிடமிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.டி. ஜனக முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் ‘உயர் நடுத்தர வருமான’ நாடுகளின் பட்டியலுக்கு முன்னேறியது இலங்கை!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வரி செலுத்தாதவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இறைவரித் திணைக்களம்!

ஆடி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி அதிபர் உயிரிழப்பு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் ஹரிணி கட்டார் பயணம்!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube