அக்கரைப்பற்றில் பெண் அதிகாரி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை, எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நேற்று (18) கைது செய்யப்பட்டார்.
அவர் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
