Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ATM-இல் கிடந்த ரூ.15,000 பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவி

ஆவணி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அக்கரப்பத்தனை பகுதியில் ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனை அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி, பணம் எடுப்பதற்காக ATM இயந்திரத்திற்குச் சென்றபோது, அங்கு பணம் விட்டுச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பணத்தை தனது வசம் வைத்துக்கொள்ளாமல் பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் ரூ.15,000 பணம் அதன் உரிய உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகி வரும் நிலையிலும், தனக்குக் கிடைத்த பணத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மாணவி மேற்கொண்ட இந்த நேர்மையான செயல், அக்கரப்பத்தனைப் பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

“அடுத்தவர் காசு நமக்கு வேண்டாம்” என்ற எண்ணத்தை செயலால் வெளிப்படுத்திய இந்த மாணவி, இளம் தலைமுறையினருக்கு நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்?

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும், போக்குவரத்து சேவையும் பொலிசாரால் ஏற்பாடு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது!

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வாழ்த்துக்கள்!

புரட்டாதி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube