கல்கிஸ்ஸை குற்றபுலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் சுமார் 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 120,000 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மொறட்டுவை, கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெரேரா மாவத்தையில் வசிக்கும் 31 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண், மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
