தனமல்வில பகுதியில் 12 போர ரக தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (29) தனமல்வில பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் தனமல்வில, ககேயாய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கியுடன் 5 கிராம் 370 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் எதற்காக இந்தத் துப்பாக்கியை வைத்திருந்தார் என்பதற்கான தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இவர் இதற்கு முன்னரும் கொலைச் சம்பவம் ஒன்றிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளினாலும் பிணையில் வெளிவந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Accidents & Disasters
மேலும், சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
