உலகின் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆன்மீகம், தத்துவம் மற்றும் நடைமுறை அறிவை உள்ளடக்கிய திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்த்து, அதன் சிறப்புகளை புதிய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருக்குறள் உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கப்படுவது, தமிழ் மற்றும் உஸ்பெக் மொழி வாசகர்களின் அறிவை மேலும் வளப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழின் தொன்மையையும், திருக்குறளின் உலகளாவிய முக்கியத்துவத்தையும் புதிய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் மொழிபெயர்ப்புகள் முக்கிய பங்காற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
