அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனைகளை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான இரகசிய வியாக்கியானத்தை (தீர்ப்பை) சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் மன்றுக்கு அறிவித்துள்ளது.
