Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை

#நுவரெலியா #பேருந்துநிலையம் #போக்குவரத்து #போக்குவரத்துசீரமைப்பு #NuwaraEliya #BusStand #BusStation #TrafficManagement #SriLanka #PublicTransport #பேருந்துபோக்குவரத்து #சாலைபோக்குவரத்து #போக்குவரத்துச்செய்தி #இலங்கைசெய்திகள்

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் பேருந்து சேவைகளை முறையாக முன்னெடுத்து, பயணிகளுக்கு சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, நுவரெலியா பிரதேச போக்குவரத்து பொலிஸார் மற்றும் மத்திய மாகாண சாலைப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து, நேற்று (07) பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் தனியார் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்தினர்.

பேருந்துகள் ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே முறையாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் பாதுகாப்பாக ஏறி இறங்கும் வரை பேருந்தை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் முறையான வரிசையைப் பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள், தடை செய்யப்பட்ட ஒலியெழுப்பிகள் மற்றும் அதிக சத்தம் ஏற்படுத்தும் உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் 75mm மழைவீழ்ச்சி பதிவாகலாம்!

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பல்லேகம ஹேமரத்தின தேரரின் விளக்கமறியல் நீட்டிப்பு!

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

வைகாசி 18, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

உங்கள் தொலைபேசி திருடப்பட்டால் கண்டிப்பாக இதை செய்யுங்கள்!

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube