ஹொரனை, வாகவத்தை களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகத்தில், தலைக்கவவசம் இன்றி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் ஹொரனை நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றைப் பார்த்துவிட்டு, அதிகாலை 2:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த உயிரிழந்த நபர் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, மொபைல் செயலி மூலம் வாடகைக்கு அமர்த்திய மோட்டார் சைக்கிளொன்றில் வாகவத்தை பகுதிக்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது சொந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிக வேகத்தில் பயணித்துள்ளார்.
இந்த விபத்து நடந்த போது, அவருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற அவரது நண்பர் இந்த சம்பவத்தைப் பார்த்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ஹொரனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
