மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக் கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு முன் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தும் கிரான்குளம் இருந்து வாழைச்சேனை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கிரான்குளத்தை சேர்ந்த 24 வயதுடைய தங்கராசா சதுஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக போபொலிசார் தெரிவிக்கின்றனர்.
