கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பட்டமளிப்பு விழாவில், தனது அபாரமான கல்விச் சாதனைகள் மூலம் 16 தங்கப் பதக்கங்களை வென்று Dr. ஹாசினி சாதனை படைத்துள்ளார்.
MBBS கற்கைநெறியில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த அவர், இறுதி MBBS பரீட்சை உட்பட ஐந்து பாடப்பிரிவுகளிலும் முதல் வகுப்பு சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மருத்துவக் கல்வியில் தொடர்ச்சியாக சிறந்து விளங்கி, பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்று 16 தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் உச்சக்கட்ட சான்றாகும்.
ஒரே பட்டமளிப்பு விழாவில் 16 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள Dr. ஹாசினியின் இந்த சாதனை, அவரது கல்விப் பயணத்தில் மட்டுமன்றி, இலங்கையின் மருத்துவத் துறைக்கே ஒரு பெருமைமிக்க அடையாளமாகும்.
இலங்கைக்கு பெருமை சேர்த்த Dr. ஹாசினிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
